சிரமமின்றி நோன்பைச் சமாளிப்பதற்காக, பின்னிரவில் உட்கொள்ளப்படும் உணவு ஸஹர் உணவு எனப்படுகிறது. ஸஹர் நேரத்தில் இவ்வாறு உணவு உட்கொள்வது கட்டாயக் கடமையில்லை என்றாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் பெரிதும் ஆர்வமூட்டப்பட்டுள்ளது. நீங்கள் ஸஹர் நேரத்தில் உண்ணுங்கள். ஏனெனில் ஸஹர் நேர உணவில் பரக்கத் (புலனுக்குத் தெரியாத மறைமுகமான பேரருள்) உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்: புகாரி 1923
Thursday, August 18, 2011
கப்ரு ஜியாரத் செய்யும் பெண்கள்!
இஸ்லாத்தின் ஆரம்பக்காலக் கட்டங்களில் கப்ருகளுக்கு ஜியாரத் செய்வதை நபி (ஸல்) அவர்கள் முழுமையாகத் தடுத்திருந்தார்கள். பின்னர் ஸஹாபாக்கள் இஸ்லாத்தை ஓரளவு விளங்கிக் கொண்டதும் அவர்களை கப்ருகளை ஜியாரத் செய்யுமாறு கூறினார்கள். அதுவும் ஆண்களுக்குத் தான். பெண்கள் ஜியாரத் செய்வது குறித்து எச்சரித்து, அவ்வாறு செய்யும் பெண்களை சபிக்கவும் செய்தார்கள்.
Monday, August 8, 2011
மலேகான் குண்டுவெடிப்பு: முஸ்லிம் இளைஞர்களின் விடுதலை வாய்ப்பு
மும்பை:2006-ஆம் ஆண்டு ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்ட நிரபராதிகளான ஒன்பது முஸ்லிம் இளைஞர்களின் விடுதலைக்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. அடுத்தவாரம் மும்பை மோக்கா நீதிமன்றத்தில் இவர்களின் மீதான வழக்கு விசாரணைக்கு வரும் வேளையில் ஜாமீனுக்கு மறுப்பு தெரிவிக்கவேண்டாம் என தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) முடிவுச்செய்துள்ளது.
Saturday, August 6, 2011
நமது பெண் (பிள்ளை)களை பாதுகாக்க சில வழிகள்...
Friday, August 5, 2011
மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்க!
ஸஹர் நேரத்து உணவு...
...வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிரிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்!... திருக்குர்ஆன் 2:187
சூரியன் உதித்து தனது ஒளிக் கதிர்களை இலேசாக வெளியாக்கும் போது தான் இரவு என்ற கருப்பு நூல் மறைந்து வெளிச்சம் என்ற வெள்ளை நூல் வெளிவரும் ஆனாலும் நம்முடைய முன்னோர்கள் அர்த்தமற்ற நவைத்து ஸவ்ம கதின் என்ற பாடத்தை மனனம் செய்து வைத்துக் கொண்டு இரவு மூன்று மணி என்ற வரையறையை ஏற்படுத்திக்கொண்டு ஸஹர் உணவு உண்டு விட்டு உறங்கி விடுபவர்கள் இன்றும் அதிகம் உள்ளனர்.
Thursday, August 4, 2011
நோன்பு கஞ்சி! செய்முறை விளக்கத்துடன்....
ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது என்பது இஸ்லாமியர்களின் முக்கிய
இறைவழிபாடாகும். பகல் முழுதும் எதுவும் உண்ணாமல் இருக்கும் இவர்கள்,
மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் நோன்பு துறப்பார்கள். அச்சமயம்,
அவர்கள் உண்பதற்காக செய்யப்படும் கஞ்சியை நோன்பு கஞ்சி என்றழைப்பர். இந்த
கஞ்சி பருகும் பதத்தில் இருப்பதில்லை. கொஞ்சம் கெட்டியாக இருக்கும்.
மிகவும் சுவையானது. உண்ணாவிரதத்தால் சோர்வுற்று இருப்பவர்களுக்கு உடனடி
சக்தியைக் கொடுக்க வல்லது. இதையே பலமுறைகளில் செய்வார்கள். ஒரு செய்முறை
இங்கே படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.
நோன்பின் நேரம் ...!
சுப்ஹ் நேரம் வந்தது முதல் சூரியன் மறையும் வரை நோன்பின் நேரமாகும். அதாவது சுப்ஹ் நேரம் துவங்கியது முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமல்,
பருகாமல்,
உடலுறவு கொள்ளாமல் இருந்து நோன்பை முழுமைப்படுத்த வேண்டும்.
வைகறை எனும் வெள்ளைக் கயிறு,
(இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! அல்குர்ஆன் 2:187
ரமலான் மாதம் தொடர்பான ஆதாரமற்ற செய்திகள்....!
ரமலான் மாதம் தொடர்பான ஆதாரமற்ற செய்திகள்
(யூசுஃப் பைஜீ,
கடையநல்லூர்)
ரமலான் மாதம் மிகச் சிறந்த மாதம் என்பதும் அம்மாதத்தில் செய்யப்படும் அமல்கள் சிறப்புக்குரியவை என்பதற்கும் திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில் ஏராளமான சான்றுகள் உள்ளன. அதே வேளையில் நபிகளாரின் பெயரில் இம்மாத சிறப்பு பற்றியும் இம்மாதத்தில் நோற்கப்படும் நோன்பின் சிறப்பு பற்றியும் இட்டுக்கட்டப்பட்ட பலவீனமான செய்திகளும் கணிசமாக இடம் பெற்றுள்ளது. இதை பல ஆலிம்கள் பயான்களிலும் கூறிவருகிறார்கள். எனவே இதன் உண்மை நிலையை தெளிவுபடுத்த,
இட்டுக்கட்டப்பட்ட,
பலவீனமான ஹதீஸ்களில் முக்கியமானவை இக்கட்டுரையில் இனம் காட்டப்படுகிறது.
பெண் சிசுக்கள் கொல்லப்படுவது ஏன்?
பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகள் விரும்பப்படுவதாலும்,
பெண் குழந்தைகளை மதிக்காத காரணத்தாலும் பெண் குழந்தைகளை மனமறிந்தே கொல்வது பெண்சிசுக்கொலையாகும். பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளை அதிகமாகப் போற்றும் கலாச்சாரமுடைய சமுதாயத்தில் இப்பழக்கம் அதிகமாகக் காணப்படுகிறது.
மாணவி சாதனை--அமெரிக்காவின் நற்செயல்
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் ஃபாத்திமா. இவர் ஒரு அங்கன்வாடி ஊழியர். இவரது மூத்த மகள் ஹலிமா தர்வேஷ் (20). நெல்லை மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 3-ம் ஆண்டு பயில்கிறார்.
ஃபித்ரா - ஸதகத்துல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாள் தர்மம்.
புனிதமிக்க ரமலானில் ஸதகத்துல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாள் தர்மத்தை நபி[ஸல்] அவர்கள் நம் மீது கடமையாக்கியுள்ளார்கள்.
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்;.
ஆண்கள், பெண்கள், அடிமை, சுதந்திரமானவர் அனைவர் மீதும் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸாவு தீட்டாத கோதுமையையோ பெருநாள் தர்மமாக நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். [புஹாரி எண் 1504 ]
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்;.
ஆண்கள், பெண்கள், அடிமை, சுதந்திரமானவர் அனைவர் மீதும் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸாவு தீட்டாத கோதுமையையோ பெருநாள் தர்மமாக நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். [புஹாரி எண் 1504 ]
விட்ட நோன்பை கர்ப்பிணிகள் நிறைவேற்றுவது அவசியமா?
கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சலுகை அளித்தார்கள்' என்ற ஹதீஸில் சலுகை என்பதற்கு, நோன்பை மீட்ட வேண்டும் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறீர்கள். அதற்கான நேரடியான எந்த ஆதாரத்தையும் முன் வைக்கவில்லை. ஆனால் நோன்பை விட்டு விடலாம்; மீட்டத் தேவையில்லை' என்ற கருத்தில் நபித்தோழர்கள் கூறிய செய்தி தாரகுத்னீ, தப்ரானீ போன்ற நூற்களில் உள்ளது. இந்த விளக்கம் இல்லையென்றால் தங்களின் விளக்கத்தை ஏற்பதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் மேற்கண்ட ஹதீஸைத் தாங்கள் புரிந்து கொண்டு விளக்கியதை விட நபித்தோழர்களின் கூற்று பொருத்தமான விளக்கமாகத் தோன்றுகிறது. இது குறித்து விளக்கவும்.
ஏ.எம்.எஸ். ஹமீது கல்முனை, இலங்கை
Wednesday, August 3, 2011
முஸ்லீம் பெண்களின் வெளீயூர் பயணம் (எச்சரிக்கை)
அன்புச் சகோதரர்களே அஸ்ஸலாமு
அலைக்கும்.
எங்கள் ஊர் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற திடுக்கிடும் சம்பவம் ஒன்றை உங்கள்அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. சில தினங்களுக்கு முன் ஒரு நாள். நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள மஞ்சக்கொல்லை என்ற கிராமத்தில் இருந்து முஸ்லிம் பெண்கள் இருவர் தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றனர். இருவரும் சம வயது உடையவர்கள். சுமார் 25 வயது இருக்கும். அவர்களுள் ஒருவர் உடல் சுகவீனமானவர். இன்னொரு பெண்மணி அவரது தோழி.
எங்கள் ஊர் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற திடுக்கிடும் சம்பவம் ஒன்றை உங்கள்அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. சில தினங்களுக்கு முன் ஒரு நாள். நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள மஞ்சக்கொல்லை என்ற கிராமத்தில் இருந்து முஸ்லிம் பெண்கள் இருவர் தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றனர். இருவரும் சம வயது உடையவர்கள். சுமார் 25 வயது இருக்கும். அவர்களுள் ஒருவர் உடல் சுகவீனமானவர். இன்னொரு பெண்மணி அவரது தோழி.
Friday, July 22, 2011
சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் பாதைகள்......
நபிமொழிகளில் கூறப்பட்டுள்ள சொர்க்கம் செல்லும் பாதைகளில் சிலவற்றை தங்கள் முன்வைக்...கின்றோம். அதன்படி செயல்படுபவர்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக.
1- ஏகத்துவமும் தூதுத்துவமும்
அல்லாஹ்வை தன் இரட்சகனாகவும், இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாகவும், முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைத்தூதராகவும் யார் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கின்றாரோ அவருக்கு சொர்க்கம் கிடைப்பது உறுதியாகிவிட்டது. (நபிமொழி, அறிவிப்பவர் :அபூஸயீத் அல்குத்ரீ-ரலி, நூல்: முஸ்லிம்)
1- ஏகத்துவமும் தூதுத்துவமும்
அல்லாஹ்வை தன் இரட்சகனாகவும், இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாகவும், முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைத்தூதராகவும் யார் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கின்றாரோ அவருக்கு சொர்க்கம் கிடைப்பது உறுதியாகிவிட்டது. (நபிமொழி, அறிவிப்பவர் :அபூஸயீத் அல்குத்ரீ-ரலி, நூல்: முஸ்லிம்)
நோன்பாளி செய்யக் கூடியவைகளும் செய்யக் கூடாதவைகளும்..
ரமலான் நோன்புடன் தொடர்புடைய சில சட்ட திட்டங்கள்..!
நிய்யத்தின் அவசியம்: ‘எவர் பஜ்ருக்கு முன்னர் நோன்பிற்குரிய நிய்யத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நஸாஈ). பெரும்பாலான முஸ்லிம்கள் நிய்யத்தை தவறாக விளங்கி வைத்துள்ளனர், ‘நவய்து ஸவ்ம அதன் பர்ல ரமழானி ஹாதிஹிஸ் ஸனதி லில்லாஹி தஆலா’ ரமழான் மாதத்தின் பர்லான நோன்பை நாளை பிடிக்க நிய்யத்து வைக்கிறேன் என்று பரவலாகச் சொல்லி வருகின்றனர்.
ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதன் பயன்கள்...!
1-நோன்பு பரிந்து பேசும்: ‘நோன்பும், அல் குர்ஆனும், மறுமையில் ஓர் அடியானுக்காக பரிந்து பேசும்: நோன்பு கூறும், ‘நான் இவ்வடியானை உணவை விட்டும், இச்சைகளை விட்டும் தடுத்திருந்தேன் இவன் விடயத்தில் பரிந்துரைப்பாயாக’! அல் குர்ஆன் கூறும் ‘நான் இவனை இரவில் தூங்கவிடாமல் தடுத்திருந்தேன் எனவே இவனுக்கு பரிந்துரை செய்வாயாக’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).
புனித ரமலானின் சிறப்புகள்...!
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் குடும்பத்தினர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக! நம்மை நோக்கி வந்திருக்கும் இம்மாதம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு மாதமாகும். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்கவேண்டிய அனைத்து ஒழுங்கு முறைகளையும் அல் குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் தெளிவு படுத்தியுள்ளது.
பராஅத் இரவும் ஆதாரமாகக் காட்டப்படும் ஹதீஸ்களின் நிலையும்
(1) பராஅத் இரவுக்கு ஆதாரமாகக் காட்டும் ஹதீஸ்களின் நிலை: இவர்கள் எடுத்து வைக்கும் முதல் ஆதாரம்:
ஸிஹாஹ் ஸித்தாவில் ஒன்றாகிய திர்மிதியில், 'ஒரு நாள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை படுக்கையில் காணவில்லை. அவர்களைத்தேடி வெளியில் சென்றேன். அப்போது அவர்கள் பகீஃ என்னும் அடக்கஸ்தலத்தில் இருந்தார்கள். என்னைக் கண்டவுடன் சொன்னார்கள், ஆயிஷாவே! அல்லாஹ்வும் அவனது தூதரும் உனக்கு துரோகம் இழைத்து விடுவார்கள் என்று பயப்படுகிறாயா? அதற்கு நான் அவ்வாறில்லை நீங்கள் மனைவியர் ஒருவரிடத்தில் வந்திருப்பீர்கள் என்று எண்ணினேன். அச்சமயம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், நிச்சயமாக இறைவன் ஷஃபான் மாதத்தின் 15 ம் நாள் இரவில் இறங்கி வருகிறான். மேலும் கல்ப் கூட்டத்தாரின் ஆடுகளின் ரோமங்களின் எண்ணிக்கையை விட உங்களில் அதிகமானவர்களின் பாவங்களை மன்னித்துவிடுகிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: திர்மிதி 670)
Subscribe to:
Posts (Atom)



