Thursday, August 18, 2011

இறை நேசர்களிடம் உதவி தேடுதல் – குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ...



அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் இரட்ச்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்; அவனிடமே நாம் மன்னிப்பு கோருகிறோம்; அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழி தவறச் செய்ய இயலாது; மேலும் யாரை அவன் வழி தவறச்செய்கின்றானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை. 

ஹிஜாபுக்காக போராடும் கல்லூரி மாணவி


மேங்களூர் ஜெயின் Pu கல்லூரியில் PUC இரெண்டாம் வருடம் படிக்கும் ஹதியா என்ற ஒரு இந்திய முஸ்லிம் மாணவி வகுப்பறையில் ஹிஜாப் அணிய உரிமை மறுக்கப்படுவதை எதிர்த்து போராடி வருகிறார். இவர் தேவைபட்டால் கவர்னர் முதல் ஜனாதிபதி வரை சென்றாவது தனது மத உரிமையை மீட்க திட்டமிட்டுள்ளார்.

ஸஹர் உணவு பற்றிய விளக்கம்...!


சிரமமின்றி நோன்பைச் சமாளிப்பதற்காக, பின்னிரவில் உட்கொள்ளப்படும் உணவு ஸஹர் உணவு எனப்படுகிறது. ஸஹர் நேரத்தில் இவ்வாறு உணவு உட்கொள்வது கட்டாயக் கடமையில்லை என்றாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் பெரிதும் ஆர்வமூட்டப்பட்டுள்ளது.  நீங்கள் ஸஹர் நேரத்தில் உண்ணுங்கள். ஏனெனில் ஸஹர் நேர உணவில் பரக்கத் (புலனுக்குத் தெரியாத மறைமுகமான பேரருள்) உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.  அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்: புகாரி 1923

கப்ரு ஜியாரத் செய்யும் பெண்கள்!

இஸ்லாத்தின் ஆரம்பக்காலக் கட்டங்களில் கப்ருகளுக்கு ஜியாரத் செய்வதை நபி (ஸல்) அவர்கள் முழுமையாகத் தடுத்திருந்தார்கள். பின்னர் ஸஹாபாக்கள் இஸ்லாத்தை ஓரளவு விளங்கிக் கொண்டதும் அவர்களை கப்ருகளை ஜியாரத் செய்யுமாறு கூறினார்கள். அதுவும் ஆண்களுக்குத் தான். பெண்கள் ஜியாரத் செய்வது குறித்து எச்சரித்து, அவ்வாறு செய்யும் பெண்களை சபிக்கவும் செய்தார்கள்.