பெண் மனம்...

பெண் மனம்...
By Abufaisal

மதிய வெயில் வஞ்சனையின்றி அனைத்தையும் சூடாக்கிக் கொண்டிருந்தது, மரங்களின் மீது அமர்ந்து ஓயாமல் கா...கா....வென்று கரைந்துக் கொண்டிருக்கும் காகங்களும் கூட வெயிலுக்கு பயந்து மறைந்து கொண்டன.

அந்த அழகான மரங்களுக்கிடையில் காற்றோட்டம் மிக்க அமைதியான வீடு, ஞாயிற்றுகிழமை அலுவலக விடுமுறையில் அவன்  தனது அறையில் முடிக்க வேண்டிய அலுவலக வேலையில் கணினியுடன் ஒன்றி போய் இருந்தான். சற்று நேரத்தில் அடுக்களையில் இருந்து மெல்ல வந்த அவனது மனைவி ஓசையின்றி அவனருகில் நின்று பார்க்கிறாள் அவனோ மானிட்டரில் இருந்து கண்களை நகர்த்தவில்லை 

அருகில் நின்றவள் “என்னங்க ரொம்ப வேலையா இருகிறீங்க போல இருக்கு” என்றதற்கு ஆம் என்று நிமிர்ந்தான். “காலைல கூட நீங்க சரியாக சாப்பிடவில்லையே” என்றவளிடம் ஒரு பெருமுச்சை விட்டு விட்டு இல்லையே நான் நல்லாதானே சாப்பிட்டேன் என்றான்.

சும்மா சொல்லாதீங்க இன்னிக்கு உங்களுக்கு காலை உணவு பிடிக்கல போல இருக்கு... வேணுமின்னா இப்போது வேறு ஏதும் செய்து தரட்டுமா என்றாள்,,,, இல்லை வேண்டாம் உனக்கு எதற்கு கஷ்டம் என்றவனிடம் 

“இதில் என்ன இருக்கு? உங்களுக்கு செய்யாம எனக்கென்ன வேறு வேலை இருக்கு, கொஞ்சம் இருங்க உங்களுக்கு பிடித்தமான வட்டலாப்பம் செய்து கொண்டு வருகிறேன் என்றவளை இருக்கட்டும் பரவாயில்லை மதிய உணவை நீ தயார் செய்து விட்டால் சாப்பிட்டு விடுவேன் என்றான்.

அவன் சொன்னதை கேளாமல் “இருக்கட்டும் நான் செய்து வருகிறேன்” என்றவள் அடுக்களையை நோக்கி விரைந்தாள். இவனுக்கோ மனம் முழுவதும் சந்தோஷம் நான் கொடுத்துவைத்தவன் இப்படி ஒரு மனைவி அமைய என்று மனதில் பூச்சி பறந்தவனாக வட்டலாப்பத்தை நினைத்து வாயில் வந்த உமிழ்நீரை விழுங்கி முடித்த அடுத்த நிமிடத்தில் அவன் மனைவி திரும்பினாள் இவனுக்கு மேலும் ஆச்சர்யம் அதுக்குள்ளாகவா ரெடி பண்ணி விட்டாய் என்றவனிடம் 

இங்க பாருங்க, செய்யிறது முக்கியமல்ல நீங்க சாப்பிடணும் அப்புறம் வேண்டாம் என்று சொல்லக்கூடாது. என்றவளிடம் சரி பரவாயில்லை கொண்டுவா என்றான். அவளோ இனிமேல்தான் செய்யப்போகிறேன் ஆனால் நீங்க இப்ப இதை சாப்பிட்டுவிட்டால் மதிய உணவு சரியாக சாப்பிட மாட்டீர்கள் என்றாள். 

இவனுக்கோ மண்டை காய்ந்தது. நான் என் பாட்டுக்கு வேலை பார்த்து கொண்டிருந்தேன் நீயே வந்து எல்லாவற்றையும் சொல்லிவிட்டு இப்போது கொண்டு வருகிறேன் என்று சொல்லி சும்மா இருந்தவனின் வயிற்றில் அமிலத்தை சுரக்க வைத்து விட்டு விட்டு இப்போது ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறாயே ஏன்?

வேண்டாங்க! சொன்ன கேளுங்க நீங்க இப்போது அதை சாப்பிட்டால் மதிய உணவை சரியாக சாப்பிட மாட்டீர்கள் என்று சொல்லிவிட்டு அவன் பதிலுக்கு கூட காத்திராமல் விருட்டென மறைந்தாள் அடுக்களைக்குள் மதிய உணவை தயாரிக்க.... அவனோ எதையும் சொல்ல இயலாமல் ஊமையாய் “ எத்தனை காலங்கள் வாழ்ந்தாலும் பெண் மனதை புரிந்து கொள்ளவே முடியாதா” என்று தன்னையே நொந்துக்கொண்டு மீண்டும் கணினியில் புதைந்தான் அவன்.  

1 comment:

  1. yep...tats true...pennoda manasai yaaralum purinthu kolla mudiyaathu!!!nice story!!!its funny!!!lol :) :) :)

    ReplyDelete