Friday, July 22, 2011

சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் பாதைகள்......

நபிமொழிகளில் கூறப்பட்டுள்ள சொர்க்கம் செல்லும் பாதைகளில் சிலவற்றை தங்கள் முன்வைக்...கின்றோம். அதன்படி செயல்படுபவர்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக.
1- ஏகத்துவமும் தூதுத்துவமும்
அல்லாஹ்வை தன் இரட்சகனாகவும், இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாகவும், முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைத்தூதராகவும் யார் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கின்றாரோ அவருக்கு சொர்க்கம் கிடைப்பது உறுதியாகிவிட்டது.  (நபிமொழி, அறிவிப்பவர் :அபூஸயீத் அல்குத்ரீ-ரலி, நூல்: முஸ்லிம்)

நோன்பாளி செய்யக் கூடியவைகளும் செய்யக் கூடாதவைகளும்..


ஒருவரை நோன்பு திறக்கவைப்பதன் சிறப்பு:

‘எவர் ஒருவரை நோன்பு திறக்க வைப்பாரோ அவருக்கு அந்த நோன்பாளிக்குக் கிடைக்கும் கூலியைப் போன்றே வழங்கப்படும். அவரது கூலியில் எந்த ஒன்றும் குறைக்கப்பட மாட்டாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், திர்மிதி).

ரமலான் நோன்புடன் தொடர்புடைய சில சட்ட திட்டங்கள்..!

நிய்யத்தின் அவசியம்: எவர் பஜ்ருக்கு முன்னர் நோன்பிற்குரிய நிய்யத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லையோ அவருக்கு நோன்பு இல்லைஎன நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நஸாஈ). பெரும்பாலான முஸ்லிம்கள் நிய்யத்தை தவறாக விளங்கி வைத்துள்ளனர், நவய்து ஸவ்ம அதன் பர்ல ரமழானி ஹாதிஹிஸ் ஸனதி லில்லாஹி தஆலாரமழான் மாதத்தின் பர்லான நோன்பை நாளை பிடிக்க நிய்யத்து வைக்கிறேன் என்று பரவலாகச் சொல்லி வருகின்றனர்.

ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதன் பயன்கள்...!


1-நோன்பு பரிந்து பேசும்: ‘நோன்பும், அல் குர்ஆனும், மறுமையில் ஓர் அடியானுக்காக பரிந்து பேசும்: நோன்பு கூறும், ‘நான் இவ்வடியானை உணவை விட்டும், இச்சைகளை விட்டும் தடுத்திருந்தேன் இவன் விடயத்தில் பரிந்துரைப்பாயாக’! அல் குர்ஆன் கூறும் ‘நான் இவனை இரவில் தூங்கவிடாமல் தடுத்திருந்தேன் எனவே இவனுக்கு பரிந்துரை செய்வாயாக’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

புனித ரமலானின் சிறப்புகள்...!


புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் குடும்பத்தினர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக! நம்மை நோக்கி வந்திருக்கும் இம்மாதம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு மாதமாகும். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்கவேண்டிய அனைத்து ஒழுங்கு முறைகளையும் அல் குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் தெளிவு படுத்தியுள்ளது.

பராஅத் இரவும் ஆதாரமாகக் காட்டப்படும் ஹதீஸ்களின் நிலையும்


(1) பராஅத் இரவுக்கு ஆதாரமாகக் காட்டும் ஹதீஸ்களின் நிலை: இவர்கள் எடுத்து வைக்கும் முதல் ஆதாரம்: 
 ஸிஹாஹ் ஸித்தாவில் ஒன்றாகிய திர்மிதியில், 'ஒரு நாள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை படுக்கையில் காணவில்லை. அவர்களைத்தேடி வெளியில் சென்றேன். அப்போது அவர்கள் பகீஃ என்னும் அடக்கஸ்தலத்தில் இருந்தார்கள். என்னைக் கண்டவுடன் சொன்னார்கள், ஆயிஷாவே! அல்லாஹ்வும் அவனது தூதரும் உனக்கு துரோகம் இழைத்து விடுவார்கள் என்று பயப்படுகிறாயா? அதற்கு நான் அவ்வாறில்லை நீங்கள் மனைவியர் ஒருவரிடத்தில் வந்திருப்பீர்கள் என்று எண்ணினேன். அச்சமயம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், நிச்சயமாக இறைவன் ஷஃபான் மாதத்தின் 15 ம் நாள் இரவில் இறங்கி வருகிறான். மேலும் கல்ப் கூட்டத்தாரின் ஆடுகளின் ரோமங்களின் எண்ணிக்கையை விட உங்களில் அதிகமானவர்களின் பாவங்களை மன்னித்துவிடுகிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: திர்மிதி 670)