Friday, July 22, 2011

சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் பாதைகள்......

நபிமொழிகளில் கூறப்பட்டுள்ள சொர்க்கம் செல்லும் பாதைகளில் சிலவற்றை தங்கள் முன்வைக்...கின்றோம். அதன்படி செயல்படுபவர்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக.
1- ஏகத்துவமும் தூதுத்துவமும்
அல்லாஹ்வை தன் இரட்சகனாகவும், இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாகவும், முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைத்தூதராகவும் யார் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கின்றாரோ அவருக்கு சொர்க்கம் கிடைப்பது உறுதியாகிவிட்டது.  (நபிமொழி, அறிவிப்பவர் :அபூஸயீத் அல்குத்ரீ-ரலி, நூல்: முஸ்லிம்)

நோன்பாளி செய்யக் கூடியவைகளும் செய்யக் கூடாதவைகளும்..


ஒருவரை நோன்பு திறக்கவைப்பதன் சிறப்பு:

‘எவர் ஒருவரை நோன்பு திறக்க வைப்பாரோ அவருக்கு அந்த நோன்பாளிக்குக் கிடைக்கும் கூலியைப் போன்றே வழங்கப்படும். அவரது கூலியில் எந்த ஒன்றும் குறைக்கப்பட மாட்டாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், திர்மிதி).

ரமலான் நோன்புடன் தொடர்புடைய சில சட்ட திட்டங்கள்..!

நிய்யத்தின் அவசியம்: எவர் பஜ்ருக்கு முன்னர் நோன்பிற்குரிய நிய்யத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லையோ அவருக்கு நோன்பு இல்லைஎன நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நஸாஈ). பெரும்பாலான முஸ்லிம்கள் நிய்யத்தை தவறாக விளங்கி வைத்துள்ளனர், நவய்து ஸவ்ம அதன் பர்ல ரமழானி ஹாதிஹிஸ் ஸனதி லில்லாஹி தஆலாரமழான் மாதத்தின் பர்லான நோன்பை நாளை பிடிக்க நிய்யத்து வைக்கிறேன் என்று பரவலாகச் சொல்லி வருகின்றனர்.

ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதன் பயன்கள்...!


1-நோன்பு பரிந்து பேசும்: ‘நோன்பும், அல் குர்ஆனும், மறுமையில் ஓர் அடியானுக்காக பரிந்து பேசும்: நோன்பு கூறும், ‘நான் இவ்வடியானை உணவை விட்டும், இச்சைகளை விட்டும் தடுத்திருந்தேன் இவன் விடயத்தில் பரிந்துரைப்பாயாக’! அல் குர்ஆன் கூறும் ‘நான் இவனை இரவில் தூங்கவிடாமல் தடுத்திருந்தேன் எனவே இவனுக்கு பரிந்துரை செய்வாயாக’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

புனித ரமலானின் சிறப்புகள்...!


புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் குடும்பத்தினர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக! நம்மை நோக்கி வந்திருக்கும் இம்மாதம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு மாதமாகும். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்கவேண்டிய அனைத்து ஒழுங்கு முறைகளையும் அல் குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் தெளிவு படுத்தியுள்ளது.

பராஅத் இரவும் ஆதாரமாகக் காட்டப்படும் ஹதீஸ்களின் நிலையும்


(1) பராஅத் இரவுக்கு ஆதாரமாகக் காட்டும் ஹதீஸ்களின் நிலை: இவர்கள் எடுத்து வைக்கும் முதல் ஆதாரம்: 
 ஸிஹாஹ் ஸித்தாவில் ஒன்றாகிய திர்மிதியில், 'ஒரு நாள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை படுக்கையில் காணவில்லை. அவர்களைத்தேடி வெளியில் சென்றேன். அப்போது அவர்கள் பகீஃ என்னும் அடக்கஸ்தலத்தில் இருந்தார்கள். என்னைக் கண்டவுடன் சொன்னார்கள், ஆயிஷாவே! அல்லாஹ்வும் அவனது தூதரும் உனக்கு துரோகம் இழைத்து விடுவார்கள் என்று பயப்படுகிறாயா? அதற்கு நான் அவ்வாறில்லை நீங்கள் மனைவியர் ஒருவரிடத்தில் வந்திருப்பீர்கள் என்று எண்ணினேன். அச்சமயம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், நிச்சயமாக இறைவன் ஷஃபான் மாதத்தின் 15 ம் நாள் இரவில் இறங்கி வருகிறான். மேலும் கல்ப் கூட்டத்தாரின் ஆடுகளின் ரோமங்களின் எண்ணிக்கையை விட உங்களில் அதிகமானவர்களின் பாவங்களை மன்னித்துவிடுகிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: திர்மிதி 670)

Saturday, July 16, 2011

ஆதரவற்ற விதவைகளுக்கான அரசாங்க உதவித் திட்டம்!


ஆதரவற்ற முதியோர்களுக்கு அரசு உதவி செய்வது போலவே, ஆதரவற்ற விதவைகளின் எதிர்காலம் இருண்டு போய்விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் அரசு செயல்படுத்தும் திட்டம் இது. எதிர்பாராத விதமாக கணவனை இழந்து, வாழ்க்கையில் தடுமாறிக் கொண்டிருக்கும் விதவை பெண்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும்.

Friday, July 15, 2011

உம்ரா செய்வதன் ஒழுங்கு முறைகள்

தமிழாக்கம்:  மெளலவி முஹம்மத் ரிஸ்மி ஜுனைத் (அபூஅப்தில்லாஹ்) 

நிச்சயமாக ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் வழிப்பாட்டு அடையாளங்களாகும். எவரேனும் (கஃபாவெனும்) அல்லாஹ்வின் வீட்டை (நாடி வந்து) ஹஜ், உம்ரா என்பவற்றை செய்யும்போது அவ்விரண்டுக்கும் இடையிலும் தொங்கோட்டம் ஓடிவருவது அவர்கள் மீது குற்றமில்லை.” (02: 158)

ஜம்ஜம்-நீரூற்று- இது போன்ற அற்புதம் உலகில் இது ஒன்று தான்

மக்காவில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன என்று இவ்வசனம் 3:97 கூறுகிறது. தெளிவான் அத்தாட்சி என்றால் யாருக்கும் எந்தச் சந்தேகமும் ஏற்படாத வகையில் மக்கள் கண்டு களிக்கும் வகையிலும் எந்தச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும் அத்தாட்சி என்பது நிரூபணமாகும் வகையிலும் இருக்க வேண்டும். மனிதன் இன்னும் கண்டறியாத சான்றுகள் பல இருக்கலாம். மனிதன் கண்டறிந்த சான்றுகளில் முதன்மையானது ஜம்ஜம் எனும் கிணறாகும்.

Tuesday, July 12, 2011

சவூதி ஜவாஜாத் சேவைகளை உங்கள் மொபைல் மூலம் அறிந்து கொள்ள...

சவூதி ஜவாஜாத் சேவைகளை உங்கள் மொபைல் மூலம் அறிந்து கொள்ள... Saudi Arabia Jawazaat services via mobile.....! part 1

Monday, July 11, 2011

அறிமுகமில்லாத வெளிநாட்டு எண்களை அழைக்காதீர்கள்'


அறிமுகமில்லாத வெளிநாட்டு எண்களிருந்து வரும் "மிஸ்டு கால்களை' திரும்ப தொடர்பு கொள்ள வேண்டாமென வாடிக்கையாளர்களை பி.எஸ்.என்.எல். கேட்டுக் கொண்டுள்ளது.

பள்ளிகளில் யோகா என்ற பெயரில் இஸ்லாமிய வரம்புகள் மீறப்படுகிறதா..?



பள்ளிகளில், இந்த மாதம் யோகா, மருத்துவ முகாம் மற்றும் பிசியோதெரபி ஆகிய முகாம்களை நடத்த, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: இம்மாதம் 8ம் தேதி முதல் 14ம் தேதி வரை, யோகாசன கல்வி முகாம்களையும், 19ம் தேதி மருத்துவ பரிசோதனை முகாம்களையும், 27ம் தேதி பிசியோதெரபி முகாம்களையும் பள்ளிகளில் நடத்த தேவையான நடவடிக்கைகளை, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் எடுத்திட வேண்டும்.

ஷா வலியுல்லாஹ்வின் பெயரில் நடக்கும் பித்தலாட்டம்


இஸ்லாம் என்பது அல்லாஹ்வினால் இம்மனித சமுதாயத்திற்கு வழங்கப்பட்டு அதை இறுத்தித்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மூலம் பூரணமாக்கிவிட்டான் என்பது இஸ்லாத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று. அதுபோல் கடவுளின் பெயராலும் மதத்தின் பெயராலும் நடக்கும் சுரண்டல்களையும் தடுத்துவிட்டது. இஸ்லாத்தில் இடைத்தரகர்களோ, மூட நம்பிக்கைகளோ சிறிதுமில்லாமல் அதன் வாசலை முற்றிலுமாக அடைத்துவிட்டது.

தாயின் கருவறையில் உனக்கு சுவாசகாற்றை தந்தது யார்?


அல்லாஹ் அளவற்ற அருளாளன்! சகோதரர்களே இங்கு அல்லாஹ்வை அளவற்ற அருளாளன் என்று புகழப்பட்டுள்ளது அதற்குப் பொருள் என்ன என்றைக்காவது சிந்தித்ததுண்டா? வாருங்கள் சிந்திப்போம் அல்லாஹ்வின் அருளுக்கு அளவுகோல் உள்ளதா? என்று சிந்தித்துப்பாருங்கள்!·

மறந்து விட்டீர்களா ?ஹிஜாபிற்காக தன் உயிரை நீத்த பெண்மணியை.


நீதிமன்றில்.. நீதிபதிகள் பார்த்திருக்க...அன்புக் கணவருக்கும் மூன்றே வயது மகனுக்கும் முன்னால்... காவல் துறை கண்முன்பு  ஒரு முஸ்லிம் கர்ப்பிணித்தாய் 18 தடவைகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா....?

இஸ்லாம் கூறும் நற்குணம்,,,,,,

ஒருவனுடைய பண்புகளை அவனுடைய நடை, உடை, பாவனைகள் படம் பிடித்துக் காட்டுவதைப் போல் பல நேரங்களில் அவனது பேச்சுக்களும் படம் பிடித்துக் காட்டுகின்றன. அவனை நல்லவனாகவும் கொடியவனாகவும் மென்மையானவனாகவும் கடுமை காட்டுபவனாகவும் பிரதிபலிக்கச் செய்யும் சக்தி அவன் பேசும் பேச்சுக்கு உண்டு.

கஞ்சா வியாபாரியிடம் சிக்கியுள்ள முஸ்லிம்களின் 50 கோடியை மீட்க வழி செய்யுங்கள்.


கண்ணியத்திற்குரிய பாக்கர் , ஹைதர் அலி, ஜவாஹிருல்லாஹ், பி.ஜெய்னுல் ஆபிதீன் ஆகியவர்களுக்கு கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹியின் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. த.மு.மு.க.வுக்காக உருவாக்கப்பட்டதுதான் முஸ்லிம் ட்ரஸ்ட் என்று 2002இல் நான் எழுதியபோது அனைவரும் சேர்ந்து மறுத்தீர்கள். 

Sunday, July 10, 2011

”ஹிஜாப் என்னுடைய அணிகலன்! மும்பையில் ஒரு ’நிகாப்’ புரட்சி

மும்பையில் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் நின்று முனிசிபாலிட்டியின் பிரச்சினைகளை அரசுக்கு எடுத்துச் செல்வதில் நிகாப் அணிந்த ஒரு சகோதரிக்கும் பங்குண்டு என்றால்...மிகை என்ன... மிக மிக மிகைதான் இல்லையா.

Saturday, July 9, 2011

நோன்பிருக்க முடியாதவர்களுக்குப் பரிகாரம் என்ன?

சில சட்டங்களில் இஸ்லாம் சிலருக்கு சலுகையளிக்கின்றது. சலுகையையும் பயன்படுத்த முடியாத அளவிற்கு பலவீனமானவர்கள் பரிகாரம் செய்யலாம் என்ற சட்டத்தையும் இஸ்லாம் முன் வைக்கின்றது.

நோன்பும் - பெண்களும்


நோயாளிகள் - பிரயாணிகள் என்ற பொது சலுகையில் அந்த நிலையைப் பெற்ற பெண்களும் அடங்குவார்கள் என்றாலும் பெண்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு இன்னும் சிலரும் சலுகைப் பெறுகிறார்கள்.